என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு அமைத்து சரி செய்யும் பணி நடந்த போது எடுத்த படம்.
    X
    குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்பு அமைத்து சரி செய்யும் பணி நடந்த போது எடுத்த படம்.

    பெருந்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு

    பெருந்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் உடைப்பை சரி செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையில் குடிநீர் குழாயில் உடைப்பு  ஏற்பட்டது. இதையடுத்து பேரூராட்சி பணியாளர்கள் உடைப்பை சரி செய்தனர்.

    பெருந்துறை நால்ரோடு பகுதியில் பெருந்துறை தெற்கு பகுதிக்கு செல்லும்  குடிநீர் குழாயில் இரவு திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் நால்ரோடு பகுதியில் ரோட்டில் செல்லும் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறியது. 

    இதனையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த போலீசார் உடனடியாக பெருந்துறை பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் வந்து தண்ணீர் சப்ளையை நிறுத்தினர். பின்னர் நால்ரோடு பகுதியில் தடுப்புகள் அமைத்து குழிதோண்டி குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 

    இந்த குழாய் உடைப்பில் இருந்து வெளியேறிய தண்ணீரால் ரோடு முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று காலையும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×