என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் பேசிய காட்சி.
வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது
வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
வேட்பாளர்கள் இரவு 10 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டு களில் ஒரு வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து மீதமுள்ள 59 வார்டுகளி, 352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறை குறித்த விளக்க கூட்டம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் நடந்தது.
இதில் ஈரோடு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணை யருமான சிவகுமார் தலை மையில் வேட்பாளர்களுக்கு விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வேட்பாளர் கையேடு ஒவ்வொரு வேட்பாள ர்களுக்கும் வழங்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறியதாவது:-
வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்டுள்ள வேட்பாளர் கையேட்டில் உள்ள நன்னடத்தை விதிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். இரவு 10 மணிக்கு மேல் வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது.
மதப்பிரச்சனை, சாதி பிரச்சனை தூண்டும் வகையில் பிரசாரம் செய்ய கூடாது. தேர்தல் செலவு ரூ.85 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க கூடாது.
அதற்கான செலவு தொகையை முறையாக பட்டியலிட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரிடம், தேர்தல் முடிந்ததும் 30 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
செலவு தொகையை தாக்கல் செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தலுக்கு ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்ய மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் முறையாக அனுமதி வாங்க வேண்டும்.
முக்கியமாக வேட்பா ளர்கள், வாக்காளர்களான பொதுமக்களுக்கு பணமோ, பரிசு பொருளோ கட்டாயம் வழங்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






