search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்கள் நியமனம்

    குடியிருப்பு மையங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முழுமையாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    உடுமலை:

    உடுமலை கல்வி மாவட்டத்தில் தன்னார்வலர் பங்களிப்புடன் கற்றல் வாய்ப்பு வழங்கியும், கற்றல் திறனை வலுப்படுத்தியும் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக பள்ளிகள் சார்ந்த குடியிருப்பு பகுதிகளில் இரு பிரிவுகளாக தன்னார்வலர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக பள்ளிகள் சார்ந்த குடியிருப்பு பகுதியை ஒரு மையமாகக்கொண்டு 20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என நியமிக்கப்பட்டுள்ளனர். 

    அதன்படி உடுமலை ஒன்றியத்தில் 88 அரசு துவக்கப்பள்ளி, 5 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, 24 அரசு நடுநிலைப்பள்ளி, 1 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி என 162 குடியிருப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 482 தன்னார்வலர்கள் நியமனம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    குடியிருப்பு மையங்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முழுமையாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    அவர்கள் மாலை நேரத்தில் ஏதேனும் ஒரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து கதை, பாட்டு என வகுப்புகளை நடத்துகின்றனர். பின் வாசிப்பு மற்றும் எழுத்துத்திறனை அதிகரிக்க செய்யும் வகையில் பல்வேறு பயிற்சிகளை அளிக்கின்றனர். 

    தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு என 139 தன்னார்வலர்களை நியமிக்க பயிற்சியும் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் கற்றலின் அவசியம் கருதி இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×