என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வேளாண் தொழில்கள் தொடங்க அழைப்பு
திருப்பூர் மாவட்டத்தில் 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
திருப்பூர்:
இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள், தொழில் முனைவோராக மாறும் வகையில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அக்ரி கிளீனிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம், வேளாண் மருந்தகம் துவங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம், வேளாண் பொருள் ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட இதர வேளாண் தொழில்களை துவக்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் 50 கிராமங்களை சேர்ந்த மக்கள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 98422 65585 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story






