search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படுமா?

    ஒவ்வொரு தேர்தல் வரும்பொழுதும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும், பின்பு கிடப்பில் போடுவதுமாக உள்ளது.
    திருப்பூர்:

    பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்குகிறது. 1958 ஒப்பந்தப்படி பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு உள்ளிட்ட அணைகள் கட்டப்பட்டன.

    கேரளா இடைமலையாறு திட்டத்தை நிறைவேற்றி பல ஆண்டு கடந்த பின்பும் தமிழக அரசியல் கட்சிகள் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு பெரிய அளவில் முயற்சி எடுக்கவில்லை என்ற குறை விவசாயிகள் மத்தியில் உள்ளது.

    ஒவ்வொரு தேர்தல் வரும்பொழுதும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுப்பதும், பின்பு கிடப்பில் போடுவதுமாக உள்ளது. திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டபின் ஆட்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான விவசாயிகள் தென்னைக்கு மாறினர். ஆட்சியாளர்கள், நீர்வரத்தை அதிகரிக்காமல் 1.75 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்தனர்.

    இதனால் தென்னை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறுகையில், தி.மு.க. தலைமையிலான அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் இந்த ஆட்சி முடிவதற்குள் அணையைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×