என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
தேர்தல் அலுவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் நிறைவடைந்தாலே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் உள்ளிட்ட அனைவரும், ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் அல்லது 9 மாதம் கடந்தவர் மட்டுமே ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்த முடியும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் நிறைவடைந்தாலே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
‘தேர்தல் பணி நியமனம், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய விபரங்களை காட்டி, ‘பூஸ்டர்’ தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி மைய பணியாளருக்கு விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.
Next Story






