என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றம்
    X
    நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றம்

    கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்

    பாபநாசம் அருகே நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள், கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா வருகிற 17-ந் தேதி வரை நடக்கிறது.

     திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நேற்று காலையில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
    பஞ்சமூர்த்திகள் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தது.

    இரவு நாகம், பத்ம வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா காட்சியும் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீமத் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ரமேஷ் குருக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசித்து வழிபட்டனர்.

    Next Story
    ×