search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    புதிய குடிநீர் திட்டத்தால் அவினாசியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

    காமராஜ் நகர், சூளை, சிந்தாமணி, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது குழாய்களில் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் தண்ணீர் பிடித்து பயனடைந்தனர்.
    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி பகுதிக்கு மேட்டுப்பாளையம்- பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

    3-வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ்  தினமும் 14 லட்சம் லிட்டர் வினியோகிக்கப்பட வேண்டும் என்ற போதிலும் 7 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்பட்டது. 

    இதனால் கடந்த காலங்களில் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. 15 முதல் 20 நாள் இடைவெளியில் வினியோகிக்கப்பட்டது. பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில்  52 ‘போர்வெல்’ தோண்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு பொதுகுழாய் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

    அவ்வகையில் காமராஜ் நகர், சூளை, சிந்தாமணி, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொது குழாய்களில் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் தண்ணீர் பிடித்து பயனடைந்தனர். தினமும், பல லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்பட்டதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. 600 முதல் 800 அடி ஆழம் வரை ‘போர்வெல் தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.

    கடந்த மாதம் நான்காவது குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. தினமும் 56 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கும் அளவுக்கு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் 3 அல்லது4  நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் வார்டுகளுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால்  ‘போர்வெல்’ தண்ணீரின் தேவை குறைந்திருக்கிறது.

    பேரூராட்சியில் மொத்தமுள்ள 52 ‘போர்வெல்’ சுழற்சி முறையில் தினமும் 15ல் இருந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் 2.50 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×