என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாழையூத்து பகுதியில் காரை சோதனை செய்த பறக்கும் படையினர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 6,566 வேட்புமனுக்கள் ஏற்பு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் மொத்தம் 6,566 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நடைபெற உள்ள இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் மாலை முடிவடைந்தது.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கு 540 பேரும், நகராட்சிகளுக்கு 329 பேரும், பேரூராட்சிகளுக்கு 1, 357 பேரும் என மொத்தம் மாவட்டத்தில் 2,226 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று அந்தந்த அலுவலகங்களில் நடைபெற்றது. மாநகராட்சியில் அளிக் கப்பட்டு இருந்த 540 வேட்பு மனுக்களில் 469 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 71 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
நகராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட 329 வேட்பு மனுக்களில் 323 வேட்பு மனுக்களும், பேரூராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட 1,357 மனுக்களில் 1,334 மனுக்களும் ஏற்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 2, 226 மனுக் களில் 2,126 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மொத்தம் 100 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் போட்டியிடு வதற்காக 2,238 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் பல்வேறு காரணங்களுக்காக 26 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 2,212 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சியில் 60 வார்டு களுக்கும், நகராட்சிகளில் 81 வார்டுகளுக்கும், பேரூராட்சி களில் 273 வார்டுகளுக்கும் என மொத்தம் 414 இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இதில் மாநகராட்சியில் 480 பேரும், நகராட்சிகளில் 542 பேரும், பேரூராட்சிகளில் 1,254 பேரும் என மொத்தம் 2,276 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் மாநகராட்சியில் 5 மனுக்களும், நகராட்சிகளில் 13 மனுக்களும், பேரூராட்சிகளில் 30 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மொத்தம் 2,228 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாளை மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெறுவதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Next Story