என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று தீச்சட்டி எடுத்து வந்த பக்தர்கள்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடன்
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 27ந் தேதி தொடங்கியது. மறுநாள் 28ந் தேதி பூத்தேர் ஊர்வலம் நடைபெற்றது.
கடந்த 1ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினந்தோறும் ஏராளமான பெண்கள் கோவில் முன்பு அமைக்கப் பட்டுள்ள பாலக்கொம்புக்கு மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிய தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் வந்தும் அம்மனை வழிபட்டு சென்றனர்.
மாசி திருவிழாவை முன் னிட்டு தினந்தோறும் பல்வேறு மண்டகபடிதாரர்கள் சார்பில் சாமிக்கு விதவிதமான அலங்காரம் செய்து மின் தேரில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
அதிலும் பக்தர்கள் பங்கேற்று அம்மனை மனமுருக வழிபட்டு செல்கின் றனர். மேலும் கோவில் கலையரங்கில் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பொடிக்காரவெள்ளாளர் மண்டகபடி வருகிற 10ந் தேதி நடைபெறுகிறது. 11ந் தேதி பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெறுகிறது.
Next Story






