என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.
பறக்கும்படை சோதனையில் 1.45 லட்சம் பறிமுதல்
தேனி மாவட்டம் கூடலூரில் பறக்கும்படை சோதனையில் 1.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் முக்கிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கூடலூர் கம்பம் மெயின் ரோட்டில் வடக்கு காளியம்மன் கோவில் அருகே ரமேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது கேரள மாநிலம் கட்டப்பணையில் இருந்து கம்பம் நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 500 பணம் இருந்தது தெரிய வந்தது.
காரை ஓட்டி வந்த அன்சலாம் என்பவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் தனது சொந்த தேவைக்காக அந்த பணத்தை கொண்டு வந்ததாக கூறினார்.
ஆனால் அந்த பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அதிகாரிகள் உத்தமபாளையம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் வேல்முருகன், கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பணத்துக்கான ஆவணத்தை காட்டி மீண்டும் பெற்றுச் செல்லுமாறு அவரிடம் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story