என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் கட்டுப்பாட்டு பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் ஆவண காப்பகம் அருகே நேற்று மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. மின்இணைப்பு கட்டுப்பாட்டு பெட்டியில் சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்து புகைமூட்டம் ஏற்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் இதுகுறித்து திருச்செங்கோடு தீயணை ப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள் டிரை கெமிக்கல் பவுடர் என்ற ரசாய பொடியை தூவி தீயை அணைத்தனர்.
இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு படை வீரர்கள் கூறுகையில், ஆஸ்பத்திரி பகுதியில் திடீரென உயர் அழுத்த மின்சாரம் வந்ததால் தீப்பிடித்திருக்கலாம் என்றும், ஸ்டெபிலைசர்கள் வைத்தால் இது போன்ற சம்பவங்களை தவிர்க்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story