என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
    X
    திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசை கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம்

    பாபநாசத்தில் மத்திய அரசை கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பாபநாசம்:

    பாபநாசம் தலைமை அஞ்சலகம் முன்பு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் சார்பில் காந்தியார் நினைவு நாளில் கோட்சே பெயரில் பாரத ரத்னா விருது வழங்குவோம் என அறிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேச மாநில அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் அழகுவேல், மாவட்ட துணை தலைவர் கோவிந்தன், ஒன்றிய செயலாளர்கள் கலியமூர்த்தி, பவானிசேகர், நகர தலைவர் இளங்கோவன், தி.மு.க. நகர செயலாளர் கபிலன், மண்டல செயலாளர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் தில்லைவனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முரளிதரன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் உறவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×