search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உரத்தட்டுப்பாட்டால் சின்ன வெங்காய உற்பத்தி பாதிப்பு

    தற்போது நடவு செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு முதல் உரமாக அடுத்த சில நாள்களில் யூரியா இட வேண்டும்.
    தாராபுரம்:

    தாராபுரம் வட்டம் குண்டடம் பகுதியில் ஜோதியம்பட்டி, செங்காளிபாளையம், எரகாம்பட்டி, மேட்டுக்கடை, மானூர்பாளையம், பெல்லம்பட்டி, பெரியகுமாரபாளையம், முத்தையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தற்போது சின்ன வெங்காய நடவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    இதில் பெரும்பாலான வெங்காய வயல்களில் ரசாயன உரங்களே இடப்பட்டு வருகின்றன. 

    இந்தநிலையில் தற்போது நடவு செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு முதல் உரமாக அடுத்த சில நாள்களில் யூரியா இட வேண்டும். ஆனால் பெரும்பலான உரக்கடைகளில் யூரியா இருப்பு இல்லை. 

    மேலும் அந்தந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் யூரியா இருப்பு இல்லை. இதனால் பயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான யூரியா கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    தவிர பொட்டாஷ் கலக்கப்பட்ட காம்ப்ளக்ஸ் உரங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டிஏபி, பொட்டாஷ் உரங்களும் இருப்பு இல்லாததால் வளரும் வெங்காய பயிர்களுக்கு எந்த உரத்தை போடுவது எனத் தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, 

    கடந்த சில ஆண்டுகளாகவே சீசனில் எந்த உரத்திற்கான தேவை அதிகரிக்கிறதோ, அந்த உரம் கடைகளில் கிடைப்பதில்லை. அதிலும் யூரியா, டிஏபி. உரங்கள் தேவையான தருணங்களில் கடைகளில் கிடைப்பதில்லை. 

    குறிப்பாக பிரபல உர நிறுவனங்கள் உரத்தட்டுப்பாடு எழும் சமயங்களில் இணை உரங்களை கட்டாயம் வாங்க வேண்டும் எனக் கூறி தேவையில்லாத உரங்களையும் விவசாயிகள் தலையில் கட்டுகின்றனர். 

    மேலும் விலையும் உயர்ந்துள்ளது. அரசு உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். 
    Next Story
    ×