என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம்
பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையை விட இந்த சிகிச்சை பன்மடங்கு எளிமையானது.
திருப்பூர்:
ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தாராபுரம் அரசு மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லா குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம் அரசு விடுமுறை தவிர, மாத முழுவதும் அனைத்து நாட்களும் நடக்கிறது.
பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு 5 நிமிடத்தில் இந்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆண்களுக்கு அரசு சார்பில் 2,100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். டிசம்பர்,- ஜனவரி 31 வரை நடந்த முகாமில் 16 பேருக்கு தழும்பில்லா குடும்ப நல கருத்தடை செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச்சையை விட இந்த சிகிச்சை பன்மடங்கு எளிமையானது. பாதுகாப்பானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. விவரங்களுக்கு 97885 - 47625, 97503 - 79267 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






