search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,657 ஆக குறைந்தது

    ஈரோட்டில் சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் 3&ம் அலை காரணமாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன்படி தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியானது. 

    பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறி என்பதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்தி கொண்டனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினர் செய்து வந்தனர்.


    இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங் கியுள்ளது. தற்போது தினசரி பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று 16 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 915 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்புடன் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 74 வயது மூதாட்டி பரிதாபமாக இறந்தார். 

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 726 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 7,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×