என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் பிட்டராக பணியாற்றி வந்தார்.
கார்த்திக் தினமும் மோட்டார்சைக்கிளில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு கார்த்திக் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். எம்.பி.கே. புதுப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






