என் மலர்
உள்ளூர் செய்திகள்

மர்ம விலங்கு கடித்து இறந்த ஆட்டு பட்டி அருகே திரண்ட ஊர் பொதுமக்கள்.
நம்பியூர் அருகே 3 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கு
நம்பியூர் அருகே 3 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே 3 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நம்பியூர் காந்திபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவர் தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்றுமாலை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு சென்றார். இரவில் இந்த பட்டிக்குள் புகுந்த ஒரு மர்ம விலங்கு அங்கு இருந்த 3 ஆட்டுக்குட்டிகளை அடித்து கொன்றது. மேலும் ஒரு குட்டியின் உடலை பாதியாக துண்டித்து எடுத்து சென்றுவிட்டது.
இன்றுகாலை வீட்டில் இருந்து வெளியே வந்த கன்னியம்மாள் பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது ஆட்டுபட்டி முழுவதும் ரத்தக்கறையாக இருப்பதையும், 3 ஆடுகள் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தெரியவந்ததும் அக்கம்பக்கத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். மேலும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாவும் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:&
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் 29 கோழிகளை மர்ம விலங்கு அடித்து கொன்றது. இந்த நிலையில் தற்போது 3 ஆடுகளை அடித்து கொன்றுள்ளது. ஆடு, கோழிகளை அடித்து கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று அச்சப்படுகிறோம்.
இதனால் இரவில் வெளியே நடமாட முடியாமல் அச்சம் அடைந்துள்ளோம். எனவே வனத்துறையினர் கண்காணிப்பு கேமிரா பொருத்தி அந்த விலங்கு என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






