என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் பூசாரி குண்டம் இறங்கிய காட்சி.
கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொடுமுடி:
கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கொடுமுடி புதுமாரியம்மன் கோவில் பொங்கல், குண்டம் இறங்கும் திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி பூச்சாட்டி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்து வந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். கோவிலின் தலைமை பூசாரி, வேல் பூசாரி, கம்ப பூசாரி ஆகியோர் தலைமையில் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் இரவு 7 மணியளவில் தலைமை பூசாரிகள் முதலாவதாக குண்டத்தில் இறங்க தொடர்ந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ச்சியாக இன்றுமதியம் பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மாலை கம்பம் பிடுங்கி ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் பொங்கல் திருவிழா முடிவடைகிறது.
Next Story






