search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தில் கோழிகளுக்கு நோய் தடுப்பூசி போட 4.37 லட்சம் டோஸ் வரவழைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலம் மாவட்டத்தில் கோழிகளுக்கு நோய் தடுப்பூசி போட 4.37 லட்சம் டோஸ் வரவழைக்கப்பட்டு போடப்பட உள்ளன.
    சேலம்:

    ராணிகட் என்னும்  வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும் தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வெள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு போகும். 

    இந்நோய் பாதித்த சில கோழிகள் தலையை இரண்டு கால்களுக்கு இடையில் செருகுக் கொள்ளும். இதனால் இதனை கொக்கு நோய் என்றும் கூறுவர். கோழிகளில் இறப்பு ஏற்படும்.

    சேலம் மாவட்டத்தில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தமிழக  அரசின் உத்தரவின்படி, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிகளுக்கு  இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் வரும் 1 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை நடத்தடப்படவுள்ளது.  

    இம்முகாம்கள்  மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புறக்கடை கோழிகளுக்கும்  வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படும்.   இத்திட்டத்தினை செயல்படுத்தட  4.372 இலட்சம்  டோஸ்கள் வெள்ளைக் கழிச்சல்  நோய் தடுப்பூசி  மருந்து பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

     சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் அருகில் உள்ள கால்நடை நிலையங்களில் அவர்களது 8 வாரம் முதல் 12 வாரங்களுக்கு மேற்பட்ட கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி போட்டு தங்களது கோழிகளை நோயிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×