என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி வகுப்பறை
பள்ளிகள் நாளை திறப்பு- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (1-ந்தேதி) முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் நாளை முதல் முழுமையாக செயல்பட உள்ளன. எனவே பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பள்ளிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கு வரும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது.
பள்ளிகளுக்கு வரும்போது அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனை செய்யவேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கும், 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகளில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






