என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பெண் மீது தாக்குதல்- 2 பேருக்கு வலைவீச்சு
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே வேலங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 30). இவர் கடந்த 28-ந் தேதி கரும்பூர்பாலம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்.
அப்போது அவியனூரை சேர்ந்த நிஜந்தன், வீரமணி ஆகியோர் அந்த வழியாக வந்தனர். இவர்கள் ஏன் வண்டியை நடுரோட்டில் நிறுத்தினாய்? என்று கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் நிஜந்தன், வீரமணி ஆகியோர் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை தகாதவார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்து, கையை பிடித்து இழுத்து கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சாமுண்டீஸ்வரி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.






