search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குளச்சலில் ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குளச்சலில் ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு. கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் மர்ம நபரை கண்டுபிடிக்க முயற்சி.
    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உடையார்விளை சந்திப்பில்  வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது.நேற்று காலை இந்த மையத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் சென்றார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் மானிட்டர் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் வங்கியின் கல்லுக்கூட்டம் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். கிளை மேலாளர் பிந்து விரைந்து சென்று உடைந்து கிடந்த ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டார். பின்னர் இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.மானிட்டரை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர்.பணம் கொள்ளையடிக்கும் முயற்சியில் உடைக்கப்பட்டதா? அல்லது போதை ஆசாமிகள் யாராவது உடைத்தார்களா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும்   கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை கண்டு பிடிக்கும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×