என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 19 பேர் கைது
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 19 பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 19 பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி சப்- இன்ஸ்பெக்டர் சாம்சன் பால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடு பட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி அடுத்த சாவடிபாளையம்புதூர் வினையா நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது 8 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ராஜேந்திரன், கண்ணன், சதீஷ், செந்தில் குமார், சக்திவேல், வெங்க டேசன், அர்ஜூனன், கார்த்திக் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ 3,780 பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 8 பேரும் கைது செய்யப் பட்டனர். இதேபோல் மலையம்பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கணபதிபாளையம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தனர்.
போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கார்த்திக், வடிவேல், குருராஜ், நந்தகுமார், கதிரவன், சுப்பிரமணி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.3,210 பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
மேலும் சீட்டுக்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைப்போல் தாலுகா போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது பணம் வைத்து சூதாடிய 5 பேர் கொண்ட கும்பலை கைது செய்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story






