என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 காசுகள் உயர்வு

நாமக்கல்:
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுகளை தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.
இதை தொடர்ந்து முட்டை விலையிலும் மாற்றம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி.) தினசரி அதிகாலையில் கூடி முட்டை விலையை நிர்ணயிப்பது வழக்கம். அதன்படி இன்று காலை முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஏற்கனவே ரூ.4.40 ஆக இருந்த முட்டை விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) வருமாறு:-
சென்னை-4.60, பர்வாலா-4.54, பெங்களூர்-4.55, டெல்லி-4.77, ஹைதராபாத்-4.11, மும்பை-4.73, மைசூர்-4.35, விஜயவாடா-4.20, ஹொஸ் பேட்-4.40, கொல்கத்த-4.88.
இது தவிர பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.94 ஆக பி.சி.சி. நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.67 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.