என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்திக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மானாமதுரை கோவில்களில் சனி பிரதோஷம்
மானாமதுரை பகுதி கோவில்களில் சனி பிரதோஷம் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆனந்தவல்லி&சோமநாதர் சுவாமி கோவிலில் தை பிரதோச விழா நடந்தது. அதைத்தொடர்ந்து சுவாமி- அம்பாள் கோவிலில் வலம் வந்தனர்.
அனைத்து நாட்களிலும் கோவிலில் வழிபாடு செய்யலாம் என்பது நடைமுறைக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமிதரிசனம் செய்தனர்.
இதேபோல் பரமக்குடி சாலையில் உள்ள குறிச்சி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து காசி நந்திக்கு 16 வகையான அபிஷேகமும், 500 லிட்டர் பால் அபிஷேகமும் நடந்தது.
மேலநெட்டூர் சொர்ண வாரிஸ்வரர், இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர். ரெயில் நிலையம் எதிரே உள்ள பூர்ணசக்ரவிநாயகர் கோவிலில் உள்ள விஸ்வநாதர், தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பிநாகம்மாள் கோவில், மானாமதுரை சிருங்கேரி சங்கரமடம் ஆகிய இடங்களில் நடந்த சனிபிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Next Story






