என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான ஆடுகள்.
தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலி
டி.என்.பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டி.என்.பாளையம் அருகே உள்ள நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்று பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தனக்கு சொந்தமான 4 ஆடுகளை வீட்டில் ஆட்டுப்பட்டி அமைத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இரவு பட்டியில் ஆடுகளை கட்டி வைத்து தூங்கு சென்றார். பின்னர் காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது 4 ஆடுகளும், ஒரு கோழியும் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுத்தை, புலி போன்ற வனவிலங்குகள் கால்தடங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.
இதில் வன விலங்குகள் ஆடுகளை தாக்கியதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை. தெருநாய்கள் தாக்கியதால் 4 ஆடுகள், ஒரு கோழி பலியானதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பங்காளப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






