search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாறையில் மொச்சையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
    X
    சிறப்பாறையில் மொச்சையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

    மயிலாடும்பாறை பகுதியில் மொச்சை விலை சரிவு

    மயிலாடும்பாறை பகுதியில் மொச்சை விலை கிலோ ரூ.25 ஆக குறைந்துள்ளது
    வருசநாடு:

    மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை, சிறப்பாறை உள்ளிட்ட கிராமங்களில் மொச்சை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சீசன் தொடங்கிய நிலையில் போதுமான அளவு மழை பெய்திருந்ததால் மொச்சை உற்பத்தி அதிக அளவில் காணப்பட்டது.

    மேலும் 1 கிலோ மொச்சை 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. உற்பத்தி மற்றும் விலை அதிக அளவில் இருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த தை பொங்கல் பண்டிகைக்கு பின்பு மொச்சை விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது சந்தைகளில் 1 கிலோ மொச்சை 25 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.

    இருப்பினும் மொச்சை உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் லாபம் மிக குறைவாகவே உள்ளது. ஆனால் கிலோ ரூ.25க்கும் கீழ் விலை குறைந்து விட்டால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே மொச்சை பயிறுக்கு நிரந்தர விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×