search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புளூடூத் மூலம் செல்போனை ஹேக் செய்யும் கும்பல்

    திண்டுக்கல்லில் புளூடூத் மூலம் செல்போனை ஹேக் செய்யும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    குள்ளனம்பட்டி:

    கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சமூகவலைதளங்கள் மூலம் பல மோசடிகள் நடைபெற்று வருவதாக அதிகளவில் போலீசாருக்கு குற்றச்சாட்டுகள் வருகின்றது.
     
    இதையொட்டி திண்டுக்கல் மாவட்ட போலீசார் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். புளூடூத் வழியாக செல் போனை ஹேக் செய்து, போனில் உள்ள தகவல்களை திருடும் கும்பல் தற்போது அதிகரித்து வருகின்றனர்.

    எனவே செல்போனில் உள்ள புளூடூத்தை தேவையற்ற நேரங்களில் ஆப் செய்து வைக்கவும். மேலும் உங்களது செல்போனை அப்டேட் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இதுபோன்ற செயல்பாடுகளால் புளூடூத் மூலம் செல்போனை ஹேக் செய்து ஏமாற்றும் கும்பலிடமிருந்து தப்பிக்கலாம். மேலும் மோசடி புகார்கள் குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×