என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
உடுமலை குப்பை கழிவுகளில் தீ புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
கோழி கழிவுகள் வீடு இடித்த கழிவுகளையும் கொட்டி விடுகின்றனர்.
உடுமலை:
உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரோட்டின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளிக்கிறது .மேலும் கோழி கழிவுகள் வீடு இடித்த கழிவுகளையும் இந்த பகுதியில் கொட்டி விடுகின்றனர்.
இந்த குப்பை மேட்டில் சமூகவிரோதிகள் யாரோ தீ வைத்து சென்று விட்டனர். இதனால் கரும் புகை ஏற்பட்டு பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள், உடுமலை வரும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் புகைமூட்டத்தால் அவதிப்பட்டனர்.
குப்பை குவிக்கப்படுவது குறித்து நகராட்சிக்கு பலமுறை தெரிவித்தும் நகராட்சி சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சமூக விரோதிகள் இதைப் பயன்படுத்தி தீ வைத்து புகைமூட்டம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இனியாவது நகராட்சி சார்பில் இங்கு குப்பை கொட்டப்படாமல் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






