search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவு நீர்
    X
    கழிவு நீர்

    சாலையோரம் கழிவு நீர் தேங்குவதால் நோய் பரவும் அபாயம்

    வணிக நிறுவனங்கள், பொதுமக்கள், கடைக்காரர்கள் கடைகளில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய முடியவில்லை அதிக துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ்ரோடு புதூர் மாரியம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

    பேளாரஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட இப்பகுதியில் இதுவரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது தெருக்களில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது. தற்போது வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் நிரம்பி வழிவதால் சிலர் மின்மோட்டார் மூலம் செப்டிக் டேங்க் நீரை வெளியேற்றி பொதுமக்கள் நடமாடும் சாலைகளில் விடுவதால் துர்நாற்றம் ஏற்பட்டு நடந்து செல்லவே முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், பொதுமக்கள், கடைக்காரர்கள் கடைகளில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய முடியவில்லை அதிக துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.

    இதனால் தோல் நோய், டெங்கு, வைரஸ் காய்ச்சல்,ஒவ்வாமை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து பல முறை சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் மாவட்ட நிர்வாகம் உரிய இப்பகுதிக்கு சாக்கடை கால்வாய் அமைத்து நிரந்தர தீர்வு கான மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×