என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியபோது எடுத்தபடம்.
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சாலை ஆக்கிரமிப்பு செய்து மூன்று வீடுகள் கட்டப்பட்டு இருந்தது.இதனை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலமுறை கூறியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்நிலையில், இன்று கும்மிடிப்பூண்டி கோட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆண்டி தலைமையில்,ஊத்துக்கோட்டை துணை வட்டாட்சியர் நடராஜன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றினர். இதனால் இப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் ஏற்பட்டது. எனவே, ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மேற்பார்வையில்,பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரச்சினையால் ஊத்துக்கோட்டையில் இருந்து பெரியபாளையம் நோக்கிச் சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டது.
Next Story






