என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்.
108 ஆம்புலன்சில் தொழிலாளியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது
108 ஆம்புலன்சில் தொழிலாளியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
108 ஆம்புலன்சில் தொழிலாளியின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா பர்கூர் மலை பகுதியை அடுத்துள்ள சின்ன செங்குலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதவன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து தொலைபேசி மூலம் 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுத்து வரவழைக் கப்பட்டது. சித்ராவை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் மருத்துமனைக்கு கிளம்பி சென்றது.
அப்போது திடீரென சித்ராவுக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டு 108 ஆம்புலன்ஸ் அவசர கால டாக்டர் சிவா பிரசவம் பார்த்தார்.
அப்போது சித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Next Story






