என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவனுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடந்த வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் 12-வது வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வாக்காளர் தின உறுதி மொழி ஏற்றனர்.
கல்லூரியில் நடைபெற்ற போஸ்டர் மேக்கிங் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவருக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் பரிசு வழங்கினார்.
இதில் சான்றிதழ் பெற்ற மாணவர் கெ.பிரணேஷை கல்லூரியின் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜோதிமணி அம்மாள், செயலர் எஸ். பரமேஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் அருள்பிரகாஷம், சங்கர் கணேஷ், முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ராமபாலன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் வே.சிவராமகிருஷணன், பைன் ஆர்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் சி.மல்லிகா, முனைவர் கார்த்திக், முனைவர் வி. சிவராமன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
Next Story






