என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய கிராம அங்காடி கட்டிடம்.
சொந்த நிதியில் அங்காடி கட்டிடம் கட்டிய ஊராட்சிமன்ற தலைவர்
தனது சொந்த நிதியில் ஊராட்சி மன்ற தலைவர் அங்காடி கட்டிடம் கட்டி கொடுத்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கள்ளப்புலியூர் ஊராட்சியில் கொண்டாங்குடி, மணஞ்சேரி, கள்ளப்புலியூர் உள்ள 900 குடும்பங்கள்
வசித்து வருகின்றனர்.
கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே உள்ள சிறிய
இடத்தில் பகுதிநேர கிராம அங்காடி இயங்கிவந்தது.
மேலும் இடம் பற்றாக்குறை அங்காடி சேமிப்பு அறை போன்ற
அத்தியவாசிய தேவைகளின் அதிகரிப்பால் கிராமபுற மக்கள் ஊராட்சி
மன்ற தலைவர் முருகனை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இந்தநிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவித்த கிராம மக்கள் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது.
மேலும் கிராமபுற அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் சேமித்து வைப்பதற்கும், உரிய முறையில் கிராம மக்களுக்கு தமிழக அரசு வினியோகம் செய்து வருவதை உணர்ந்து கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று கள்ளப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தனது சொந்த நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில்
280 பயனாளிகள் பயன்பெற பகுதி நேர கிராம அங்காடி கட்டிடத்தை
கிராம மக்கள் முன்னிலையில் அர்ப்பணித்தார்.
இதனையடுத்து கள்ளப்புலியூர் கிராம மக்கள் புதிய கிராம அங்காடி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் கே.முருகன் முன்னிலையில் பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
விழாவில் அனைத்து கட்சி பிரமுகர்கள், மகளிர் குழுவினர், பொதுமக்கள், அங்காடி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






