என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
முதல்வரின் முகவரி புத்தகத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 78 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது
முதல்வரின் முகவரி புத்தகத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 78 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
முதல்வரின் முகவரி புத்தகத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் 78 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
உங்கள் தொகுதியில் முதல்வர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியவற்றின் மூலமாகப் பெறப்படும் மனுக்கள் கடந்த 4 மாதங்களாக ‘முதல்வரின் முகவரி’ எனும் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்தந்த மாவட்டங்களில் பெறப்படும் மனுக்களும் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு முதல்வரின் தனிப்பிரிவால் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, ஈரோடு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணை கலெக்டர் குமரன் கூறியதாவது:&
“முதல்வரின் தனிப்பிரிவு, ஈரோடு கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம், வேளாண் குறைதீர் கூட்டம், அமைச் சர்கள் மூலமாகப் பெறும் மனுக்கள் அனைத்தும் ”முதல்வரின் முகவரி” திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஒரே மனுவை பல முறை வழங்குவது, தகுதி அற்றவை போன்ற காரணத்தால் சில மனுக்கள் நிராகரிக்கப்படும். மற்ற மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படுகிறது.
இதுதவிர, வளர்ச்சித் திட்டப் பணிகள், சாலை அமைத்தல், உதவித்தொகை பெறுதல், போலீஸ் நடவடிக்கை போன்றவை ஏற்கப்பட்டு அந்தந்தத் துறை மூலமாக நடவடிக்கைக்கு அனுப்படுகின்றன.
அந்த மனுக்களும் தீர்வு காணப்படும் வரை மாவட்டத்தில் மட்டுமின்றி முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் வரை கண்காணிப்படுகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 78 ஆயிரத்து 308 மனுக்களில் 28 ஆயிரத்து 591 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட கால அவகாசம், நிதி மற்றும் திட்ட அனுமதி போன்ற காரணங்களால் 13 ஆயிரத்து 98 மனுக்கள் மீதான நடவடிக்கை நிலுவையில் உள்ளது.
உரிய தகுதியுடன் ஏற்கப்பட்ட 35 ஆயிரத்து 314 மனுக்கள் மீது அந்தந்த துறை மூலமாகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மனுக்களும் “முதல்வரின் முகவரி” திட்டத்தின் கீழ் பதிவேற்றம் செய்யப்படுவதால், மனு தவறிவிட்டது, இல்லை என்பது போன்ற காரணங்களுக்கு இடமின்றி தகுதி உடைய அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






