என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசியக்கொடி ஏற்றிய யானை
தேசிய கொடி ஏற்றிய யானை
ராஜபாளையத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியை யானை ஏற்றிய சம்பவம் ருசிகரமாக அமைந்தது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்மந்தபுரம் சீதக்காதிதெரு பகுதியில் ராவுத்தர் ஜமாத், பரிமளராவுத்தர் ஜமாத் மற்றும் அசனர் ஜமாத் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் லலிதா என்ற யானை தேசியக்கொடியுடன் ஊர்வலமாக வலம் வந்தது. மேலப்பள்ளிவாசல் தலைவர் சையது இப்ராகிம் தலைமையில் யானை கொடி ஏற்றி வைக்க, ஜமாத் நிர்வாகிகள் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
மத நல்லிணக்கத்திற்கு முன் உதாரணமாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்ததாக சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முகமது மஸ்தான் உள்பட பலர் செய்திருந்தனர்.
Next Story






