என் மலர்
உள்ளூர் செய்திகள்

திறந்து வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை
ஈரோட்டில் அம்பேத்கர் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
ஈரோடு:
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தபகுதியில் சட்டமேதை டாக்டர்.அம்பேத்கருக்கு முழு உருவ சிலை அமைக்கவேண்டும் என நீண்ட வருடமாக பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதேபோல் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை குழு ஏற்படுத்தப்பட்டு அதில் 32 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அம்பேத்கர் சிலை வைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி சிலை வைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தகவலை தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சிலை வைக்க நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக கடந்த 22-ந் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து பன்னீர்செல்வம் பார்க்கில் அம்பேத்கர் சிலை வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதற்காக ஹைதராபாத்தில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டது. இதற்கான செலவையையும், சிலை வைப்பதற்கான செலவையையும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. ஏற்று கொண்டது.
நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள வளாகத்தில் கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது. சிலை மஞ்சள் துணியால் மூடப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து குடியரசு தினமான இன்று சிலையை திறக்க முடிவு செய்யப்பட்டது. இது அரசு, கட்சி சார்பற்ற நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக 32 அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த பணியை அமைச்சர் முத்துசாமி இன்றுகாலை பார்வையிட்டார்.
இதனையடுத்து இன்றுமதியம் 1.15 மணியளவில் சென்னையிலிருந்து கானொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிலை திறப்பு விழா எளிமையான முறையில் நடந்தது. விழாவை காணும் வகையில் 2 டிஜிட்டல் எல்.இ.டி.திரை அமைக்கப்பட்டிருந்தது.
Next Story






