என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஈரோட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது-.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது-.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. கடந்த 7-ந் தேதி முதல் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 1,229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 30 கூடுதலாகும்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து 19ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 742பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 11 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால்  722 பேர்  இறந்துள்ளனர்.  தற்போது மாவட்டம் முழுவதும் 7, 332 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி, இருமல், காய்ச்சல் , தலைவலி உடல் சோர்வு போன்ற பாதிப்புடன் மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல், தலைவலி பரவி வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் வீட்டில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×