என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

    கோபி அருகே செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    கோபி அருகே செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணாநகர், வடக்கு வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி செல்வி. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களின் மகள் ஜெயக்கொடி(17). இவர் பங்களாப்புதூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வீட்டில்  ஜெயக்கொடி நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். 

    இதை தாய் செல்வி கண்டித்ததால் மனமுடைந்த ஜெயக்கொடி நைலான் கயிற்றால் தூக்கிட்டுக் கொண்டார்.

    பின்னர் அருகில் இருந்தவர்களின் உதவியோடு மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×