என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
சென்னிமலை முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சென்னிமலை முருகன் கோவிலில் தைமாதத்தையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் தைமாதத்தையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழும் சென்னிமலை முருகன் கோவிலில் இந்தஆண்டு கொரோனா தாக்கம் மூன்றாவது அலை பரவலை தொடர்ந்து தேராட்டம் இல்லாமல், பக்தர்களுக்கு அனுமதியின்றி தைப்பூசவிழா நடந்தது.
அதைதொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற வியாழக்கிழமை மட்டும் அனுமதி இருந்தது. தொடர்ந்து மலை ஏற பக்தர்களுக்கு அனுமதியில்லை.
வழக்கமாகவே வாரம்தோறும் செவ்வாய்கிழமை சென்னிமலை முருகன் கோவிலில் முருகப்பெருமானை அதிக அளவில் தரிசனம் செய்ய பக்தர்கள் வருவது வாடிக்கை.
நேற்று தைப்பூசம் மற்றும் மகாதரிசன நாளுக்குப் பிறகு வந்த முதல் செவ்வாய்கிழமை என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்து சென்றனர்.
முககவசம் அணிந்து வந்த பக்தர்களை மற்றும் கோவில் பணியாளர்கள் கோவிலுக்குள் அனுமதித்தனர்.
Next Story






