என் மலர்
உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ள வக்கீல் லோகநாதன்.
ஈரோட்டில் வக்கீல் உண்ணாவிரதப் போராட்டம்
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
ஈரோடு கருங்கல் பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வலியுறுத்தி சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான லோகநாதன் என்பவர் தமிழக அரசு, பள்ளிகல்வித்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் என பல தரப்பில் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறபடுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்று கருங்கல்பாளையம் காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பு லோகநாதன் தனிநபர் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து வக்கீல் லோகநாதன் கூறும்போது:--
பள்ளியின் நுழைவாயிலில் இருந்து போர்டிகோ வரைக்கும் சிமெண்ட் தளம் போட வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள், வெளிப்புறம் முகப்பு, சுற்றுசுவர் புனரமைப்பு செய்து வர்ணம் பூச வேண்டும், சுற்று சுவர் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஓவியங்கள் மூலம் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டும்.
பள்ளியை சுற்றி காணப் படுகின்ற சுகாதாரமற்ற சுற்றுச்சூழலை உடனடியாக அகற்றி பாதுகாப்பான சுகாதாரமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பள்ளியின் சுற்றுச்சுவரையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களும் அகற்றப்பட்டு பள்ளி மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
வக்கீல் உண்ணா விரதத்தையொட்டி கருங்கல்பாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story






