என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
தலைமை ஆசிரியர்கள் வெளிமாவட்ட பணியிடமாறுதலுக்கான கவுன்சிலிங்
ஈரோடு மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்திற்கான பணியிடமாறுதல் கவுன்சிலிங் இன்று 2-வது நாளாக நடந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் வெளிமாவட்டத்திற்கான பணியிடமாறுதல் கவுன்சிலிங் இன்று 2-வது நாளாக நடந்தது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் 2021-2022-ம் ஆண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
இதில் அரசு, மாநகராட்சி, நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்க ளுக்கும் கலந்தாய்வு நடைபெற்ற உள்ளது.
ஆசிரியர்களுக்கு மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் பணி மூப்பு அடிப்படையில் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் களுக் கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.
ஈரோடு பவளத்தாம் பாளையத்தில் உள்ள ஏ.இ.டி.பள்ளியில் கலந்தாய்வு நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 17 தலைமையா சிரியர்கள் கலந்தா ய்வில் பங்கேற்றனர். இதில் 12 பேர் பணியிட மாறுதல் பெற்றனர். 5 பேர் பங்கேற்க வரவில்லை.
இதை தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஈரோடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் களுக்கான வெளி மாவட்டத்திற்கான பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் பார்வையி ட்டார். இந்த கலந்தாய்வு வரும் பிப்ரவரி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
Next Story






