என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேர் கைது

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கவுந்தப்பாடி:

    ஈரோட்டில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது கவுந்தப்பாடி அடுத்த ஓடத்துறை சுடுகாட்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். 

    அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (30), ஸ்ரீரங்கன் (42), வடிவேலன் (31), வீரக்குமார் (31), மலேஸ்வரன் (22) என தெரியவந்தது. இவர்கள் ரூ.250 வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. 

    இதுகுறித்து கவந்தபடி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் சிட்டு கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.  

    இதேபோல் போலீசார் அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கார்த்தி, அருண்குமார், முருகன் ஆகியோரை 3 பேரை கைது செய்து பணம் மட்டும் சிட்டு கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×