என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த ரெயில்வே போலீசார்.
    X
    ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்த ரெயில்வே போலீசார்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    -
    குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுவரன் முருகானந்தம், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிஷாந்த் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இன்று ஈரோடு ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் உடமைகள் சோதனை செய்யப்பட்டது. 

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலைய இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது. 

    இதேபோல் இன்று ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×