என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 5 கடைகளுக்கு அபராதம்
ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த 5 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் முழு ஊரடங்கை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த 5 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக் கிழமை முழு நேர ஊரடங்கும் கடை பிடிக்கப்பட்டு வரு கிறது. இதே போல் நேற்று (ஞாயிற்க்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் 1,500-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதைப்போல் 14 சோதனைச் சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப் பட்டனர்.
ஊரடங்கை மீறி சுற்று பவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்திருந்தார்.
ஆனால் நேற்று ஊரடங்கை மீறி பலர் தேவையின்றி சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. ஈரோடு மாநகர் போரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தன.
சிலர் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றி வந்தனர். இவ்வறாக நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் ஊரடங்கி மீறியதாக 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
மேலும் 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று முழு ஊரடங்கை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்ட 5 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
Next Story






