search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு பேருந்தில் பயணிகள் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்த போது எடுத்தப்படம்.
    X
    ஈரோடு பேருந்தில் பயணிகள் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்த போது எடுத்தப்படம்.

    ஈரோட்டில் இன்று பஸ்களில் அலைமோதிய கூட்டம்

    நேற்று முழு ஊரடங்குக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து பஸ்களில் கூட்டம் அலைமோதியது. -
    ஈரோடு:

    நேற்று முழு ஊரடங்குக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டது. இதையடுத்து பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
    -
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு அவை அமலில் இருந்து வருகிறது. 

    இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுபோல் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

    நேற்று முழு ஊரடங்கை யொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பொதுப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஈரோட்டில் முழு ஊரடங்கையொட்டி முக்கியச்சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.  

    பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் வழக்கம்போல் பொது போக்குவரத்து தொடங்கியது. 

    இன்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வந்த அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

    ஈரோடு மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேலை விஷயமாக நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள், அரசு ஊழியர்கள்  பஸ் போக்குவரத்தை நம்பி உள்ளனர். 

    குறிப்பாக சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு வந்த தனியார் பஸ், அரசு பஸ்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இன்று இருந்தது.  கொரோனா காலகட்டம் என்பதால் பஸ்களில் பயணம் செய்ய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

    முக்கியமாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இன்று சில பயணிகள் முக கவசம் அணியாமல்  பஸ் ஏற வந்தனர். அவர்களை கண்டக்டர் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தினார். பெரும்பாலும் பயணிகள் முககவசம் அணிந்து இருந்தனர்.
    Next Story
    ×