search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    தடையை மீறி மது விற்ற 7 பேர் கைது

    ஈரோட்டில் தடையை மீறி மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தடையை மீறி மது விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் தடையை மீறி ஒரு சில இடங்களில் மது விற்பனை நடைபெற்றது. தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தி ருந்தனர்.

    இதையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் போலீசாருடன் மதுவிலக்கு  பிரிவு போலீசார் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு இடங்களில் சோத னையிலும் ஈடுபட்டனர்.

    பங்களாபுதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் சத்தி-அத்தாணி ரோடு, கொண்டியம் பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அந்த நபர் அதேப்பகுதியை சேர்ந்த பூவரசன் (23) என்பதும் அனுமதியின்றி மதுவை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 35 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

    இதேபோல் பவானிசாகர், வெள்ளோடு, அரச்சலூர், திங்களூர், ஆப்பக்கூடல் போன்ற பகுதியில் அனுமதியின்றி மதுவை விற்பனைக்கு வைத்திருந்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மேலும் 90 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் கருப்பசாமி தலைமையில் போலீசார் வாய்க்கால் மேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

    அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தாங்கள் கொண்டு வந்த மது பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்களிடம் இருந்து 72 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×