என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

    ஈரோட்டில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மார்டி ங்லூதர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தம்பாளையம் பகுதியில் சேவல் சூதாட்டம்

     நடைபெறுவதாக் போலீசாருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவயிடம் சென்று பார்த்த போது பணம் கட்டி சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    போலீசார் அவர்களை சுற்று வளைத்து பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரகு என்கிற ரகுவரன் (25), சித்தோடு பகுதியை சேர்ந்த கதிர்வேல் (56), வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (26), கருங்கல்பாளையத்தை சேர்ந்த குணசீலன் (24), சூரம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சென்னிமலையை சேர்ந்த பிரசாந் (23), காசிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா என்கிற காளிதாஸ் (32), சூரம்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (27) ஆகிய 8 பேரும் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    போலீசார் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் ரூ.12,300 மற்றும் 3 சேவல்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×