என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல் மூட்டைகளுடன் ரோட்டில் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி ரோட்டில் கவிழ்ந்தது
கோபி அருகே லாரியின் பின் பக்க டயர் வெடித்ததால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி ரோட்டில் கவிழ்ந்தது.
டி.என்.பாளையம்:
கோபி அருகே லாரியின் பின் பக்க டயர் வெடித்ததால் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த மினி லாரி ரோட்டில் கவிழ்ந்தது.
பவானி அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 40) டிரைவர். இவர் குமாரபாளையத்தில் இருந்து மினிலாரியில் நெல் மூட்டைகள் ஏற்றிக் கொண்டு டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூர் பகுதிக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது கள்ளிப்பட்டி அருகே உள்ள அடசப்பாளை யம்பிரிவு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக மினி லாரியின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி நெல்மூட்டைகளுடன் ரோட்டில் சாய்ந்து கவிழ்ந்தது.
இதில் லாரியின் முன் பகுதி சேதமானது. இதில் டிரைவர் மாரிமுத்து காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவலறிந்து பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மற்றொரு லாரியில் சாலையில் கொட்டி கிடந்த நெல் மூட்டைகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதனால் சத்தியமங் கலம்- பவானி ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றன.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். இதையடுத்து மற்ற வாகனங்கள் சென்றன.
Next Story






